சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாக விளங்குகிறது. இங்கு உள்ள முக்குளத்தில் நீராடி சுவாமியை வழிபாடு செய்தால் 7ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது.

முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் தீபாராதனை செய்து தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின் சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றதுது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *