திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வலங்கைமான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 98 BL A 2- வாக்குச்சாவடி முகவர்கள், BDA – வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், பேரூராட்சி வார்டு கழக செயலாளர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR ) பணி தொடர்பான பயிற்சிக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கேசவன் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் மேற்கு வீ.அன்பரசன், கிழக்கு நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, பேரூர் செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், க.செல்வம் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிங்குதெரு ராஜேஷ், சதானந்தம், சண்முகசுந்தரம் யாதவ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், BLA 2- வாக்குச்சாவடி முகவர்கள், BDA – வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.