தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருமணம் ஆன 13 நாளிலே தீக்குளித்து பழனியைச் சேர்ந்த வாலிபர் சாவு — குடும்ப தகராறு மூலனூரில் சோகமாக முடிந்தது!”
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணம் நடந்தது கடந்த 13 நாட்களிலே. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குடும்ப தகராறு , மது போதையில் தீக்குளித்து கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலனூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பானுப்பிரியா (29), முன்பே திருமணம் ஆனவர். கணவரை , கணவர் இறந்த நிலையில் ஏழு வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். மூலனூரிலுள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை செய்துவரும் அவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாளையம் அடிவாரத்தைச் சேர்ந்த கௌதம் (31) என்பவரை காதலித்து வந்தார். கௌதம், மூலனூரில் உள்ள காத்தாடி நிறுவனமான ஸ்ப்ரிங் எனர்ஜி நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் உள்ள அக்ஷயா என்ற துணை நிறுவனத்தின் பிட்டராக வேலை வேலை செய்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3.ஆம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னர், பானுப்பிரியா செல்போனில் பேசுவது பிடிக்காமல், “உடனே செல்போனை மாற்றிவிடு” என்று அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், மது அருந்தும் பழக்கமுள்ள கௌதம் தினமும் மது போதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில், மது அருந்திவிட்டு வந்த கௌதம், மூலனூரில் உள்ள பானு ப்பிரியாவின் வீட்டிற்கு சென்று இனிமேல் நான் சண்டை போட மாட்டேன் வா இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம் என தெரிவித்ததாகவும் ஆனால் காதலித்தபோது என்னை அன்பே செல்லமே என கூறிவிட்டு திருமணம் முடிந்த 13 நாட்களில் போன் நம்பரை மாற்று யாரிடமும் பேசாதே என்னை சந்தேகப்படும் படியான வார்த்தைகளால் நீ என்னை திட்டுவது எனக்கு பிடிக்கவில்லை மற்றும் நீ மது அருந்த மாட்டேன் என தெரிவித்தாய் ஆனால் தினமும் மது குடிக்கிறாய் இந்த மது குடிக்கும் யாரையும் எனக்கு பிடிக்காது எனவே நீ திருந்தி நல்லவனாக நான் உன்னுடன் வாழ்கிறேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பானுப்பிரியாவுடன் ஏற்பட்ட கடுமையான தகராறின் போது, தன்னிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலில் உள்ள பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, “நான் தீக்குளிக்கப் போகிறேன்” என மிரட்டியுள்ளார். அதனுடன், தீப்பெட்டியை எடுத்து , உரசியபோது உடலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
தீப்பற்றிய கௌதமை மீட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக, மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.