இந்திய அளவில் பல்வேறு சேவைகளை செய்து வரும் JCI ஜே.சி.ஐ.அமைப்பின் கிளையான கோயம்புத்தூர் ஜெனித் கோவையில் பல்வேறு சமூக நல பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்..

இந்நிலையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர் ஜெனித் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் தேசியத் தலைவர் JCI PPP டாக்டர் சுப்பிரமணியன்,கவுரவ விருந்தினர்களாக தேசிய துணைத் தலைவர் JFS அஷோக், புதிய மாவட்டத் தலைவர் JCI PPP பிரேம்சரண்,முன்னாள் மாவட்டத் தலைவர்கள் JFS கவுசிக்.R, JCI Sen,பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..

தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக தலைவர் JC HGF சிந்து மற்றும் செயலாளர் JC HGF அரவிந்த்,காசாளர் JC பிரவீன் GB, துணை தலைவர்கள் JC கார்த்திக்,JC பிரபு,JC கவிதன்,JC மணிகண்டன்,JC பிளஸ்ஸி,இயக்குனர்கள்JC தர்ஷன்,JC ரேச்சல் ஜெமிமா,JC சரண்யாதேவி,JCகார்த்திக்,மகளிர் அணி தலைவர் JC ஆனந்தி செல்வன்,JC ஜெயந்தி,ஜூனியர் அணி தலைவர் JJC ஆதித்யன்,செயலாளர் JJC ஹாஸினி,பொருளாளர் JJC ஹரிணி,ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்..

விழாவில் ஜெனித் கிளையில் கடந்த ஆண்டுகளில் சிறந்து செயல்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
கடந்த 2025 ஆம் ஆண்டு சிறந்த தலைவராக செயல்பட்ட JCI Senமுரளிதரன் ஜெனித் குழுவில் ஐந்து விருதுகள் வென்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஜெனித் அமைப்பு வரலாற்றில் முதல் முறையாக உறுப்பினர்களுக்காக முழுக்க இலவச ‘ஸ்டால் கான்செப்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ப தொடர்ந்து 2026 ஆம் ஆண்டின் புதிய திட்டங்கள் அறமுகப்படுத்தப்பட்டன..

குடும்ப இணைப்பு மற்றும் உற்சாகத்திற்கான களநிகழ்வான ஜெனித் பிரீமியர் லீக் 2.0,
ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு திறன் மேம்பாட்டு அமர்வு,இளைஞர் போதைப்பொருள் விழிப்புணர்வில் கோயம்புத்தூரின் முக்கிய முயற்சி,குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் தலைமைத்திறன் வளர்ச்சிக்கான தளம்,பெண்களின் சுயநிலையை மேம்படுத்தும் ஆற்றல் தளம்,குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்ட முழுமையான திட்டம்,ஆசிரியர்களின் சமூக பங்களிப்பை கௌரவிக்கும் சிறப்பு விழா உள்ளிட்ட திட்டங்களை வரும் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது…

விழாவில் ஜோன் 17 ல் இருந்து 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *