தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அலங்கியம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்:
நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நாற்று நட்ட பெண்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பெண்கள் நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நாற்றுகளை நட்டனர்.
தண்ணீர் திறப்பு தாராபுரம் அலங்கியம், கொழுஞ்சிவாடி, நஞ்சியம்பாளையம் ஆகிய நான்கு பாசன வாய்க்கால்கள் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தெல் நடவு பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில், பாசன வாய்க்கால்கள் மூலம் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர் இந்தநிலையில் உடுமலை அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தாராபுரம் பகுதியில் உள்ள நான்கு பாசன வாய்க்கால் மூலம் அப்பகுதி நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
குறிப்பாக மழைக்காலம் மற்றும் கோடை கால பருவங்களில் நெல் சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. இதில், சாவிததிரி, டி.பி.எஸ். 3, ஏ.டி.டி. 37. – 20 உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையை நம்பி அக்டோபர் மாதத்திலேயே நெல் நாற்றங் காலை விவசாயிகள் தயார் செய்ய தொடங்கி விடுவார்கள். கிணற்று பாசனத்தை நம்பி வயல்களில் நெல் நாற்றங்கால் தயாரித்து பருவமழை தொடங்கிய உடன் நடவு பணியில் ஈடுபடுவார்கள்.
தற்போது பெய்த தொடர்மழை காரணமாக தாராபுரம்,அலங்கியம்,கொளத்துப்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தற்போது அலங்கியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன பகுதிகளில் நெல் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, நாட்டுப்புற பாடல்களை பாடியபடி பணியில் பெண்கள் நடுபடுவது, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பணியாற்றும் இவர்கள், களைப்பு நீங்க பாடல் பாடுவது, அலங்கியம் பகுதியில் வித்தியாசமான காட்சி யாக உள்ளது. ஒரு பெண் பாடல் பாட மற்ற பெண்கள் குலவையிட என கோரசாக சேர்ந்து பாடி நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டனர். இது அந்த வழியாக சென்றவர்களை வெகுவாக கவர்ந்தது.