திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 556 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து.