கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூரை அடுத்துள்ள வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருகோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி கோவில் நிலங்களை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை போலீசார் கைது செய்தனர் அங்குள்ள நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழும் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர். மு.மணி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதனையொட்டி மீண்டும் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இனாம் நிலங்களில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , பாமக மாநில துணைத்தலைவர் மருத்துவர் மணி மற்றும் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத், பாமக மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர். பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, இரு தரப்பினரிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.