மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எடையாளம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி பள்ளியில் 75-ம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
எடையாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மரத்தடியில் தொடங்கிய பள்ளி பின்னர் முன்னாள் எம்பி ஏ கே மூர்த்தி தொகுதி நிதியில் காங்கிரட் கட்டிடம் கட்டப்பட்டது பழமையும் பெருமையும் வாய்ந்த பள்ளியில் புதிய அடையாளம் பழைய அடையாளம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் முன்னதாக 2023 ஆண்டு விழாவில் ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் மீனாட்சி வாசித்தார்.

இதனை தொடர்ந்து விழாவில் முன்னாள் மாணவர் வினோத்
முயற்சியால் சன் டிவி புகழ் நகைச்சுவை நாவலர் புலவர் மா.ராமலிங்கம் அவரின் நாளைய நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் மாணவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் எடையாளம் கி.குமரவேல், பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்,
கிராம நிர்வாக அலுவலர்,உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *