கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இதில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்று உணவுகள் தயாரித்து அசத்தல் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக தி ட்ராவெல்லிங் ஃபுட்டி (The Travelling Foodie) குழு ஆறாவது ஆண்டாக உணவு போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் தயாரித்த ஆரோக்கிய உணவுகளை அழகாக காட்சிபடுத்தினர்…..

கோவையை சேர்ந்த பத்மா பாலமுருகன்,மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து,சமூக வலை தள பக்கங்களில் தி ட்ராவெல்லிங் ஃபுட்டி எனும் குழு துவங்கப்பட்டு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் பலரின் கவனங்களையும் ஈர்த்து வருகின்றனர்..

இந்நிலையில் கோவை விழாவையொட்டி,கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப் சென்டனரி மற்றும் டிராவலிங் ஃபுட்டி ஆகியோர் இணைந்து ஆரோக்கிய உணவுகள் எனும் தலைப்பில் ஸ்னாக்ஸ் வகை துரித உணவுகளுக்கான சமையல் போட்டிகளை நடத்தினர்.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நடைபெற்ற போட்டியை கவிதா மகேஸ்வரி மற்றும் கோயம்புத்தூர் இன்னர் வீல் சென்டனரி கிளப் தலைவர் தீபிகா விஜய் ஆகியோர் துவக்கி வைத்தனர்..

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவை விரைவாக அதே சமயத்தி்ல் சுவையாக தயார் செய்யும் போட்டி,கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தி சாய் குப்சுப் உணவக அரங்கில் நடைபெற்றது..

இதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் கலந்து கொண்டு, தாங்கள் சமைக்கும் உணவுகளில் ருசியோடு உணவுகளை அழகாக பார்வைபடுத்தி அதனை பரிமாறினர்..

உணவு வகைகளில் அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் வகைகளை நட்சத்திர ஓட்டல்களில் இருப்பது போல அலங்காரம் செய்து காட்சிபடுத்தும் வகையில் நடைபெற்ற இதில்,சிறந்த சமையல் கலைஞர்களை தேர்வு செய்ய கவிதா ரமேஷ்,பிரபல கோ கிளாம் கண்காட்சி இயக்குனர் ஹீனா,மெரின் ஜேக்கப் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு உணவுகளை அழகாக அலங்கரித்த சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்..

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறந்த உணவிகளை தயாரித்த குழுவினருக்கு தி டிராவலர்ஸ் ஃபுட்டீஸ் குழு நிர்வாகிகள் ,பத்மா பாலமுருகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்…

இது போன்ற போட்டிகள் நடத்துவதால் இல்லத்தரசிகள் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை அழகாக பார்வைபடுத்தி வழங்குவதை ஊக்கப்படுத்துவதோடு,ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரிப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *