தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் திரிவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்

மாநகராட்சி நிர்வாகமும் பலமுறை மாடு உரிமையாளர்களுக்கு சாலைகளில் மாடுகளை திரிய விட வேண்டாம் என்று பலமுறை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது

இதனை அடுத்து தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றுவதை பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் உத்தரவின் பெயரில் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை எட்டையாபுரம் ரோடு பாளையங்கோட்டை ரோடு திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் திரிந்த 36 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான கோ சாலையில் கொண்டு அடைக்கப்பட்டது

இதில் மாடுகளுக்கு 5000 ரூபாயும் கன்னுக்குட்டிகளுக்கு 2500 ரூபாயும் முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் பணத்தை செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்ல வேண்டும் இரண்டாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் கண்ணு குட்டிக்கு 5000 ரூபாயும் மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு மாநகராட்சிக்கு சொந்தம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது அது போல வாகன ஓட்டுனர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆகையால் இனி வரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் தெரிந்தால் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கோசாலையில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா சுகாதார அலுவலர் ராஜபாண்டி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்

அப்போது கோசாலையில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு ஃபுல் உள்ளிட்ட உணவு வகைகளை நேரத்துக்கு நேரம் வைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *