திருத்துறைப்பூண்டி, நவம்பர்,19
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கோமள பேட்டையில் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக டிஏபி உரம் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு செய்த பொழுது பிரபல உர நிறுவனத்தின் பெயரில் 170 மூட்டை அதாவது சுமார் எட்டு டன்னுக்கு மேல் டிஏபி உரம் போலி இருப்பதை திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கண்டறிந்தார்கள்.
அதன் பிறகு அதன் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்கள் மேலும் பரிசோதனை முடிவு வரும் வரை அந்த உரக்கடை விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பதற்கு தடை விதித்து சீல் வைத்துள்ளார்கள்.
மேலும் இது போலி உரம் என்பது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடைக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் எனவும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார் .