தமிழகம் முழுவது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதேபோல கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் கென்னடி தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜபாண்டி, தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் ரஞ்சித், அனைத்திந்திய ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் கோவேந்தன் அய்யனார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் பாஸ்கர், வட்டார செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்