கோவைபுதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘லூமினா 2.0’ கலை மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கம்..

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் ‘லூமினா 2.0 – தி நெக்ஸ்ட் சாப்டர்’ எனும் கண்காட்சி நடைபெற்றது இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் , கல்லூரியின் தலைமை செயல் அலுவலரும் செயலாளருமான ஜெயஸ்ரீ சூர்யகுமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,
திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் மற்றும் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சித் தொடர்பியல் மற்றும் மின்னணு ஊடகத் துறை இணை பேராசிரியர் டாக்டர் பண்புசெல்வன், கோவையைச் சேர்ந்த பிறந்த குழந்தைகள் புகைப்படக் கலைஞர் ரூபிகா பாலக்காட்டைச் சேர்ந்த துணி ஓவியக் கலைஞர் அபிலாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் பழங்கால புகைப்படக் கருவிகள் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, கூடாரத் திரையரங்கம், முப்பரிமாண காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன கோவையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து கண்காட்சிகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்..

புகைப்படம், ஓவியம், தொழில்நுட்பம் மற்றும் காட்சிக் கலைகளின் புதிய பரிமாணங்களை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக கல்லூரியின் செயலாளர் ஜெயஸ்ரீ சூர்யகுமார்,தெரிவித்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *