திருவொற்றியூரில் சாலை மறியல் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
இரண்டு நாட்களுக்கு முன் அ. தி. மு. க சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் இருந்த முன்னாள் முதல்வர்கள் படத்தை கிழித்தெறிந்த மாநகராட்சி ஊழியர்களை கண்டித்து தமது தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே . குப்பன்

திருவொற்றியூர்.

சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே முன்னாள் எம். எல். ஏ கே. குப்பன் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் அ. தி. மு. க சார்பில் தண்ணீர் பந்தலை வடசென்னை அ. தி. மு. க வேட்பாளர் ராயபுரம் மனோ திறந்து வைத்தார்.
தேர்தல் விதிகள் அமலில் இருப்பதாக கூறி திருவொற்றியூர் உதவி பொறியாளர் மனோஜ் தலைமையில் வந்த மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பந்தலை அகற்றினர் அப்போது தண்ணீர் பந்தல் அருகே வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல் அமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேனர்களை ஊழியர்கள் கத்தியால் கிழித்தெறிந்தனர்.

தகவல் அறிந்து வந்த அ. தி.மு.க வினர் முன்னாள் எம். எல். ஏ. கே. குப்பன் தலமையில் 100க்கும் மேற்பட்ட அ. தி. மு. க. வினர் கிழிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்கள் பேனரை கையில் ஏந்தியபடி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கே. குப்பன் நிருபர்களிடம் கூறியதாவது தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் பல்வேறு அரசியல் கட்சிகள் அமைத்துள்ளனர்.

கடுமையாக வெப்ப காற்று வீசும் போது அரசால் மட்டும் தண்ணீர் பந்தல் அமைக்க முடியாது சேவை மனப்பான்மையுடன் அ. தி.மு.க வினர் அமைத்த தண்ணீர் பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் எங்களது தலைவர்கள் படங்களை கிழித்து எரிந்து பந்தலை அகற்றியது கண்டிக்கத்தக்கது சாலை மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் படம் இருந்து வரும் நிலையில் அதிமுகவிற்கு மட்டும் ஏன் இந்த நடவடிக்கை என்று கேள்வி எழுப்பினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *