திமுக சார்பில் தேரடி பேருந்து நிறுத்தம் மற்றும் டி.எச்.சாலை அருகில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை திறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இதில் ஒரு பகுதியாக திருவொற்றியூரில் தேரடி பேருந்து நிறுத்தம் மற்றும் டி எச் சாலை அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் மற்றும் முதல் மண்டலகுழு தலைவர் திமு தனியரசு தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி இளநீர் கிர்ணி பழம் வெள்ளரிக்காய் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

இதில் சாலையில் நடந்து செல்பவர்கள் பேருந்துக்காக காத்து இருப்பவர்கள் வந்து வாங்கி பருகினர். இந்த நிகழ்வில் குறிஞ்சி கணேசன், ஆசைத்தம்பி நி.நித்யாதாசன் தமிழ்ச்செல்வன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக தண்ணீர் பந்தல் பேனர் கட்சி கொடிகள் வைக்கக் கூடாது என்ற நடைமுறை உள்ள நிலையில் திமுக தண்ணீர் பந்தல் வைத்ததற்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி கிடையாது கடிதம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *