திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய (மே) தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற உலக குழந்தைகள் தினவிழா நிகழ்வில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வேளாங்கண்ணி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், திரைப்பட கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன், எய்டு இந்தியா திட்ட மேற்பார்வையாளர் க.முருகன், உதவி ஆசிரியை சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும் மாணவர்கள் திருக்குறள் மற்றும் பழமொழிகளை வாசித்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.