முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளர் பை.மு. ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துைர வரவேற்புரையாற்றினாா்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில இளைஞா் அணி செயலாளரும் துணைமுதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆலோசனை படி நடைபெறுகின்ற இந்த கூட்டமானது மிகவும் முக்கியமானதாகும். காரணம் வரும் 27ம் தேதி இளம் தலைவர் உதயநிதி பிறந்தநாளை சிறப்பாக நலத்திட்ட உதவியுடன் எல்லோரும் நன்மை அடையும் வகையில் அமைய வேண்டும். குறிப்பாக பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் முதியோா் இல்லத்திற்கு உணவு வழங்க வேண்டும்.

இது தான்இளைஞர் அணி என்ற உத்வேகம் ஏற்படும் வகையில் இளைஞர் அணி செயலாளா் ராமஜெயம் எல்லோரையும் ஓருமைப்படுத்தி செய்துவருகிறாா். இது தோ்தல் காலம் மாற்று இயக்கதை சேர்ந்தவர்களுக்கும் திமுக இளைஞர்அணி செய்த பணிகளை வௌியுலகம் பாராட்டும் வகையில் உங்கள் செயல்பாடு அமைந்திட வேண்டும். எஸ்ஐஆர் என்று சிறப்பு திருத்தம் படிவத்தன் மூலம் எந்த வகையிலாவது வாக்கு வங்கியை குறைத்து திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தில் தோ்தல் ஆணையத்தின் மூலம் பிஜேபி அரசு குளறுபடியை ஏற்படுத்துகிறது.

நம்முடைய முதலமைச்சா் ஏற்கனவே சாியான திட்டமிடல் பணிகளை நமக்குஎல்லாம் தொிவித்துள்ளாா். அதன்படி இளைஞர் அணி தம்பிமாா்கள் அதில் கவனம் ெசலுத்தி முதலமைச்சர் துணை முதலமைச்சர் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படவேண்டும். திமுகவில் புதிய இரத்தம் பாய்ச்ச பட்டுள்ளது.

எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது வீழ்த்தலாம் என்று நினைப்பவா்களின் கனவு ஓரு நாளும் நிறைவேறாது. இளைஞர் அணியினரை வெல்லமுடியாது வரும் காலம் இளைஞர் அணிதான் முதன்மையான அணியாக இருந்து செயல்பட போகிறது. கட்சிக்காகவும் இயக்கத்திற்காகவும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றுபவா்களுக்கு தொடர்ந்து உாிய அங்கீகாரம் உங்களுக்கு வழங்கப்படும். தோ்தலுக்கு உத்வேகமாக இருக்கும் உங்களுக்கு எப்போதும் நான் சகோதரனாக இருந்து எல்லா வகையிலும் உதவிகள் செய்வேன். வரும் சனி ஞாயிறு இரண்டு தினங்கள் வாக்குசாவடிகளில் எஸ்ஐஆர்கான முகாம் நடைபெறுகிறது.

அதில் அனைவரும் முழுமையாக ஈடுப்பட்டு நமக்கான உாிமைகளை பெறுவதுமட்டுமின்றி மற்றவா்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். 2026ல் தோ்தலில் வெற்றி பெற்று 7வது முறையாக கழகம் ஆட்சி அமைத்தது. மீண்டும் முதலமைச்சராக தளபதியாா் பொறுப்பேற்றாா். என்ற வகையில் சபதம் ஏற்று பணியாற்றுங்கள் என்று பேசினாா்.


கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகப்பெருமாள், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பொதுக்குழு உறுப்பினா் சொா்ணகுமாா், மாவட்ட அணி அமைப்பாளா்கள் செல்வக்குமாா், வீரபாகு, ரகுராமன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், குமாா்பாண்டியன், பால்துரை, வக்கீல்கள் பூங்குமாா், கிருபாகரன், கபடிகந்தன், உள்பட ஓன்றிய நகர பேரூா்பகுதி இளைஞர் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகா் நன்றியுரையாற்றினாா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *