72 வது கூட்டுறவு வார விழா நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்,மருத்துவ முகாம்கள் என 7 நாட்களும் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டது.
கூட்டுறவு வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மன்னார்குடி அருகே அத்திக்கோட்டை கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ப.பிரபா தலைமை வகித்தார்.
முன்னிலை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர். ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
கள அலுவலர் N.மணிமாறன், செருமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாட்சியர் M. ரவிராசு, செயலாளர் R.அண்ணாதுரை, கால்நடை உதவி மருத்துவர் A.கார்த்திக் கால்நடை ஆய்வாளர் ராணி எலிசபெத் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாதவன் அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
கூட்டுறவு இயக்கத்தின் சிறப்புகள் கூட்டுறவினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. கால்நடை மருத்துவ முகாமில் ஆடு, மாடு, கோழி, நாய், என 300 கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கால்நடைகளை சிறப்பாக பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலேயே அதிக பட்சமாக செருமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பயனாளர்களுக்கு இந்த ஆண்டு 1 கோடியே 20 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.