வெ. முருகேசன் செய்தியாளர்
திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுக் கட்சியினர் பாஜக தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கலை மற்றும் கலாச்சார பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் ரவி,
வர்த்தக பிரிவு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையில், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தலைவர் முத்துவேல், மாவட்ட செயலாளர் சபாபதி, தமிழர் நலன் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் வினோத்குமார், மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், அலுவலக செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.