கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவியாளராக பணிபுரிந்த ஏழுமலை திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கணக்கராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ரிஷிவந்தியத்தில் கணக்கராக பணிபுரிந்த முத்துசாமி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், உளுந்துார்பேட்டையில் ஊர்நல அலுவலராக (நிலை 1) பணிபுரிந்த முரளிதரன் திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கணக்கராகவும், திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் மரியபிருந்தா உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகத்தில் கணக்கராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 9 பி.டி.ஓ., அலுவலகங்களிலும் கணக்கர், உதவியாளர் மற்றும் ஊர்நல அலுவலர் (நிலை 1) பணிபுரியும் 93 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பத்மஜா உத்தரவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *