நாமக்கல்,

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் நடைப்பெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்ட பிறகு சாலை மார்க்கமாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் திராவிட விடுதலைக் கழக மாநாட்டிற்கு செல்வதற்காக வருகை புரிந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான எம். மேட்டுப்பட்டி பகுதியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என் . இராஜேஸ்குமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் கே.பொன்னுசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அங்கு நின்றிருந்த முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாசு வெடித்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.

இந்த நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அ.அசோக் குமார், பி.பாலசுப்பிரமணியன், செந்தில் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் பழனியாண்டி, தனபால், முருகேசன் மற்றும்
ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *