நீலகிரி மாவட்டம் கூடலூர் செம்பாலா பகுதியில் முஸ்லிம் அனாதை பள்ளி மற்றும் இல்லம் உள்ளது. இங்கு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான உணவு, உடை, கல்வி ஆகியவை ஜி.டி.எம்.ஓ. அமைப்பு செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மக்களின் நலன் வேண்டி மகளிர் பார்வை நாள் என்ற பிரார்த்தனை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இவ்வருடமும் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அனாதை குழந்தைகளின் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளகேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை புரிந்தனர்.

இதற்காக பல்வேறு சமூக ஆர்வலர்கள்,தொண்டு நிர்வனங்கள் சார்பாக வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் தங்களது சார்பாக உணவுகள் சமைத்து சாதி மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *