சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் முருகன் வயது 55 இவரது மனைவி விஜயலட்சுமி வயது 48 இவருக்கு மகள் பிரியதர்ஷினி வயது 20 ஹரிஹரன் வயது 16 உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நங்கவள்ளி நோக்கி ஈகோ காரில் பணிக்காக சென்ற பொழுது நங்கவள்ளி அரசு மருத்துவமனை அருகில் நங்கவள்ளியில் இருந்து வேகமாக வந்த மினி பஸ் கார் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த எஸ் எஸ் ஐ முருகனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் உயிரிழந்தார். நங்கவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிந்து மினி பஸ் பறிமுதல் செய்தனர். பஸ்சை விட்டு தப்பி ஓடிய டிரைவரான சின்ன சோரகை சேர்ந்த குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த எஸ் எஸ் ஐ முருகன் உடலுக்கு சேலம் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ஓமலூர் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் நங்கவள்ளி காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.