விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.


சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா உள்பட ஓட்டபிடாரம்; சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார்.

தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள் அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தொகுதி களநிலவரம், மக்கள் மனநிலை, அரசு செய்த சாதனைகள் எந்த அளவிற்கு வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியும் போது பல ஒன்றிய செயலாளர்கள் தங்களது தந்தை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆற்றிய பணிகளையும் பொறுப்புக்களையும் எடுத்துக் கூறி அவரது மகன்கள், வாரிசுகள் என்ற கருத்தையும் பதிவு செய்தனர். எல்லா கருத்துக்களையும் கேட்டறிந்த நிலையில் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு செயல்பட வேண்டிய நிலை குறித்து அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி உடனிருந்தார்.பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்;துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்து கலந்துரையாடினர்.


அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணக்குமார் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது, ஒரு மாதத்திற்கு முன்பு தனது மகள் கல்லூரிக்கு சேலம் செல்லும் வழியில் கரூர் அருகில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பலனாக தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகவும், என்மீது அக்கறை கொண்டு தாங்கள் நலம் விசாரித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், கூறினார் சரவணக்குமார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *