கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சந்திரா ஹீண்டாய் 10 வது ஷோரும் துவக்க விழா துவக்க விழாவை முன்னிட்டு புதிய ஆல் -நியூ ஹீண்டாய் வெள்யூ கார் அறிமுகம் .
கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து புதிய கார்களை அறிமுகப்படுத்துவதில், ஹீண்டாய் கார் நிறுவனம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹீண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 1998-ம் ஆண்டு அறிமுகமானது முதல். சந்திரா ஹீண்டாயும் தனது கார் விற்பனை சேவையை, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கியது.
27 ஆண்டுகளாக ஹீண்டாய் கார் நிறுவனத்துடன் பயணம் செய்து வரும் சந்திரா ஹீண்டாய், தனது 10 வது கிளையை கோவை அவினாசி சாலையில் 2வது ஷோருமாக கின்னியம்பாளையம் பகுதியில் துவங்கியது.
இதற்கான துவக்க விழா, சந்திரா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர். நந்தினி ரங்கசாமி மற்றும் சந்திரா ஆட்டோமொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் திரு. ரஞ்சித் கோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலையில் நடை வற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹீண்டாய் நிறுவனத்தின் தென் மண்டல வணிகத் தலைமை அதிகாரி திரு. கிரியா சங்கர் மிஸ்ரா, தென் மண்டல வணிக ஒருங்கிணைப்பாளர் திரு . யங்ஹீன் யுன் மற்றும் தமிழ்நாடு மண்டல விற்பனைத் தலைவர் திரு. கௌசிக் சரண் ராமன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் அறியகமான புதிய ஹீண்டாய் ஆல் நியூ வென்யூ கார் அறிமுகம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர். நந்தினி ரங்கசாமி, வாடிக்கையாளர்களின் நலன் கருதி, சந்திரா ஹீன்டாய் தனது சேவைகளை விரிவு படுத்தி வருவதன் தொடர்ச்சியாக, தற்பொழுது அயினாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் புதிய ஷோடுமை துவக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
விழாவில் புதிய ஹீண்டாய் கார் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, கார் சாவி வழங்கப்பட்டது இவ்விழாவில் சந்திரா ஹீண்டாய் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழிபர்கள் உட்பட பலர். கலந்து கொண்டனர்.