துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ.ஆர். தீவிர வாக்காளர் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத் தலைவர் மெடிக்கல் முரளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.