பரமத்தி வேலூர் செய்தியாளர் .
எம் கார்த்திக்ராஜா.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சியில் சக்திநகர் , காந்திநகர், கந்த நகர், ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் சப்ளை இன்று காலை வழக்கம் போல் விநியோகம் செய்யப்பட்டது .

விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேரும் சகதியமாக சாக்கடை நீராக குடி நீர் குழாய்களில் வந்தது.

பரமத்தி வேலூர் பேரூராட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்வது வழக்கம்

இன்று காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட போது பேரூராட்சியில் குடிநீர் எடுத்து விடும் ஆறுமுகம் என்ற ஊழியர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார் ஆலோசனையின் பேரில் அந்த பகுதிகளில் உள்ள பைப்புகளில் தேங்கியிருக்கும் அடைப்பு எடுப்பதற்காக கம்ரஸர் டிராக்டர் மூலம் குழாய்களில் உள்ள அடைப்பு எடுப்பதற்காக ஏர் (காற்று) பிடித்து அழுத்தி உள்ளார்

அப்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளில் குடி தண்ணீர் சேறும் , சகதியுமாக கலந்து குடிதண்ணீர்
வந்துள்ளது

இந்த பேரூராட்சியில் உள்ள பேட்டையில் உள்ளூர் மாரியம்மன் கோயிலில் பண்டிகை என்பதால் பொதுமக்கள் பேரூராட்சியில் இருந்து சப்ளை செய்யப்பட்ட குடி தண்ணீரை பிடித்து முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதற்கு முழு காரணம் பேரூராட்சி செயல்அலுவலர் செல்வக்குமார்தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

பொதுமக்களிடம் முன்னறிவிப்பு செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்யும் நேரத்தில் குழாய்களில் அடைப்பு எடுத்தததால் இந்தப் பகுதி குடி நீர் குழாய்களில் குடிதண்ணீர் அப்படி சேறும் சகதியுமாக வந்தது

வந்த குடிநீரையும் கோயில் திருவிழா நேரத்தில் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் புலம்பி கொண்டு சென்றது பரிதாபமாக இருந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *