பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்எஸ். செந்தில்குமார் விடுதடதுளடள அறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள்பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.2012ம் ஆண்டு தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை 10 ஆண்டுகளை கடந்தும் நிறைவேற்றப்பட வில்லை.இதை வலியுறுத்தி அவர்களுக்காக தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர்களின் தொகுப்பூதியம் மட்டுமே படிப்படியாக ₹2ஆயிரம், ₹700, ₹2300 என உயர்த்தியதால் ₹10ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது.2012ம் ஆண்டுக்கு முன்பு உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்து சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தியதை போன்று, தாங்களும் நிரந்தரப்பணியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதே பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தற்காலிகப் பணியில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க முடியாததற்கு, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அரசுக்கு இருக்கலாம்.

ஆனால் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி, இந்த விஷயத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

அதோடு, குறைவான ஊதியம், தற்காலிகப் பணி என்பதைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் கல்வி நலன் கருதி பணியாற்றிவரும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு சற்று கூடுதல் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுவதை உணர்ந்து, அரசு இந்த விஷயத்தை கையாள வேண்டும்.

ஆள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இரண்டையும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பது, அரசுப் பணிகளின் முதன்மையான சிறப்பம்சமான பணிப் பாதுகாப்பு என்பதையே அர்த்தமற்றதாக்கிவிடும்.

உரிய கல்வித் தகுதி பெற்றவர்களுக்கே தற்காலிகப் பணி நியமனங்களும் வழங்கப்படுகின்றன.

அவர்கள் நிரந்தரப் பணியை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் தற்காலிகப் பணி வாய்ப்புகளை ஏற்கின்றனர்.

அந்த நம்பிக்கை பொய்யாகாமல், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதையே, தற்போது இந்தப் பணியில் எஞ்சியுள்ள 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களது ஒன்றுபட்ட குரலாக கேட்கிறது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலில் 181வது வாக்குறுதியை அளித்தது.

இரண்டு பட்ஜெட்டை எதிர்பார்த்த அவர்களின் நம்பிக்கையை இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.இந்த சட்டசபையில் அரசாணை வெளியிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறபஙபட்டுள்ளது.


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *