செய்தியாளர் மரியான் பாபு


“Trophy Tour”-னை கொடியசைத்து தொடங்கி வைத்து “Trophy Tour”-பேருந்தை
மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்..

14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு கரூர் மாவட்டம் விளையாட்டு அரங்கத்திற்கு வருகை புரிந்த “Trophy Tour”- பேருந்தை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வரவேற்று பார்வையிட்டார்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆளையம் சார்பாக 14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள மாணவ,மாணவியர்கள்,விளையாட்டு வீரர்,வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் “Trophy Tour”என்கிற தலைப்பில் ஹாக்கி உலகக் கோப்பையை தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கும் 11.11.2025 முதல் அதற்கென தனிப் பேருந்தில் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் “Trophy Tour”-னை கடந்த 10.11.2025 அன்று மாலை 4.00 மணிக்கு சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தது.கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் துவங்கி பள்ளிகல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், தப்பாட்டம், பறை, பரதநாட்டியம், மேளதாளம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு, ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்களை களின் அணிவகுப்பு மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காட்சிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, Trophy-ஆனது மேலதாளத்துடன் கரூர் பழைய பேருந்து நிலையம் வழியாக சேலம் பைபாஸ் ரவுண்டானாவிற்கு சென்று அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, கல்வி குழு தலைவர் வசுமதி பிரபு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன், மாணவ, மாணவியர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *