மதுரை மற்றும் சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை பயன்படுத்தி தங்களை பெருமைப்படுத்தியதாக கூறி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் , மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சியுடன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

மதுரை என்றாலே கோவில் நகரம், பாரம்பரியம், கலாச்சாரம் ,வீரம், ஜல்லிக்கட்டு என சொல்லிக் கொண்டே போகலாம் அதிலும் தை மாதம் பிறந்து விட்டால் மதுரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம் அத்தகைய பெருமையுடைய மதுரை மாநகரில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி வரும் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது அதற்காக மதுரை தயாராகி வரும் நிலையில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயன் காளை வடிவமைக்கப்பட்டுள்ளது,

இது தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றது, ஜல்லிக்கட்டு காளையை பெருமைப்படுத்தியதற்காக மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு காளையை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சின்னமாக வெளியிட்டு தங்களை பெருமைப்படுத்தியதற்காக மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்,

மேலும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டி என்பது இந்திய அளவில் மட்டுமே பரவலாக பேசப்பட்டு வந்தது, தற்போது உலக ஹாக்கி போட்டியில் சின்னமாக இந்த ஜல்லிக்கட்டு காளைகளை இடம்பெற செய்ததன் மூலம் உலக அளவில் இந்த ஜல்லிக்கட்டின் பெருமை பேசப்படும் எனவும் காளை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் செல்வி. யோகதர்ஷினி செய்தியாளர்களிடம் பேசும்போது….
கடந்த பத்து வருடங்களாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்து வருகிறேன் தற்போது உலக ஹாக்கி போட்டியில் இந்த ஜல்லிக்கட்டு காளையின் சின்னத்தை இடம்பெறச் செய்தல் மூலம் எங்களது காளைகளின் பெருமையை உலகறிய செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும் மாடுபிடி வீரர் மற்றும் ஹாக்கி வீரரான வாடிப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் பேசும்போது ……
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக கலந்து கொள்பவர்களும் ஹாக்கி மைதானத்தில் விளையாடுபவர்களும் ஒரே மனோ பக்குவத்தில் தான் இருக்க முடியும் மனது ஒருநிலைப்பட்டு அமைதியான ஒரு நிலைக்கு சென்றால்தான் காளையை அடக்க முடியும், ஹாக்கியில் அமைதியான ஆள் நிலை தியானத்தில் இருப்பது போல் விளையாண்டால்தான் வெற்றி அடைய முடியும் எனவும் அத்தகைய பெருமைமிக்க ஹாக்கிக்கு ஜல்லிக்கட்டு காளை சின்னத்தை வடிவமைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *