நாகப்பட்டினம்,அக்.1-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் கீழக்கட்டளை பாசன வாய்க்காலை தூர்வார அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரி வருகின்றனர்.

திருக்கண்ணபுரம் ஊராட்சி ராதாரம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், திருப்புகலூர் முடிகொண்டான் ஆற்றில் இருந்து திருக்கண்ணபுரம் ராதாரம்பூர் வழியாக வரும் கீழக்கட்டளை பாசன வாய்க்காலை தூர்வாரக் கோரி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருப்பினும், பாசன வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அப்பகுதி விவசாயிகள் ஒன்றுகூடி கீழக்கட்டளை பாசன வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர்.

இதற்காக, விவசாயிகள் இணைந்து ரூ. 60 ஆயிரம் நிதி வசூல் செய்து பாசன வாய்க்காலில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *