
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உலக மீனவர் தினம் நவம்பர் 21 அன்று ஓசூரைச் சார்ந்த மீனவ நலச்சங்கத்தை சார்ந்தவர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர மேயர் சத்யா ஓசூர் மீனவர் நலச்சங்கத்தின் கொடியேற்றி, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்.
மேலும் திமுகவின் முக்கிய பொறுப்பாளர் எம்.சீனிவாசன் அவர்களும், ஓசூர் திமுக முக்கிய பிரமுகர் தேர்பேட்டை ராமு அவர்களும், தேர் பேட்டை சக்திவேல் அவர்களும், ஓசூர் மாநகர மீனவர் சங்க தலைவரும், ஓசூர் மாநகர கூட்டுறவு சங்க அமைப்பாளருமாகிய ஆர்.கே.ரவிக்குமார் அவர்களும், டிஎம்எஸ் மீன் அங்காடியின் உரிமையாளரும், ஓசூர் மீன் வியாபார சங்க தலைவருமான டி.சூடப்பா மற்றும் ஏராளமான வியாபாரிகள், மீனவ நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர் பகுதியில் பிரபலமான டிஎம் எஸ் குழுமத்தின் இரண்டாவது அங்காடி ஓசூரில் புதியதாக திறக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் மீன் அங்காடியில் கடை எண் 55 மற்றும் 56ல் திறக்கப்பட்டது.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்