சர்வதேச தினை ஆண்டு, 2023 முன்னிட்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ,ஆம்வே நியூட்ரிலைட் இணைந்து கோவையில் ஈட் ரைட் மில்லெட் எனும் தலைப்பில் வாக்கதான் நடைபெற்றது.

கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய வாக்கத்தானை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தென் மண்டல இயக்குநர் டாக்டர். எம். கண்ணன் மற்றும் ஆம்வே இந்தியா வடக்கு மற்றும் தெற்கு சீனியர் துணைத் தலைவர் குர்சரன் சீமா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கமலா வர்தன ராவ் ஒருங்கிணைத்த வாக்கத்தான் நான்கு கிலோ மீட்டர் நடைபெற்றது.இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆண்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய, ஆம்வே இந்தியாவின் பொது மேலாளர் அன்ஷு புத்ராஜா, ஓர் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் ஆம்வே இந்தியா தனது 25-வது ஆண்டைக்கொண்டாடுவதாக கூறிய அவர்,உலகின் அதி வேகமாக வளர்ந்துவரும் ஒரு பொருளாதாரமாக இருந்தாலும், ஓர் ஆரோக்கியமான தேசத்தை நோக்கிய நமது முன்னேற்றம் தற்போது தொடங்கியுள்ளதாக கூறினார்.

மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை,இந்தியாவின் முக்கிய நகரங்களான,பெங்களூரு, தில்லி, சென்னை, கொல்கத்தா,மும்பை போன்ற நகரங்களில் நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *