சோழவந்தான்,

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஸ்ரீ பூர்ண புஷ் கலாம்பாள் சமேத பூவலிங்க அய்யனார் கோயிலில் கோபுர கலசங்கள் திருடு போயின. இரிடியம் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

முள்ளிப்பள்ளம் கிராம மக்களின் காவல் தெய்வமாக. விளங்கி வரும். இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 2014இல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோயிலின் சால கோபுரத்திலும் தனி சன்னதி உள்ள விநாயகரின் விமான கலசங்கள் திருடு போயுள்ளது. பூசாரி பிச்ச கண்ணு கூறியதாவது; இக்கோயிலில் நான் கடந்த மே.7ந்தேதி இரவு பூஜை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். மறுநாள் வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டேன். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு பூஜை செய்து முடித்துவிட்டு விநாயகருக்கு பூஜை செய்ய வரும்போது தான் கோபுரத்தின் மேலிருந்த கலசம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் கோயிலின் அனைத்து பக்கங்களிலும் சென்று வேறு ஏதும் காணாமல் போய் உள்ளதா என பார்த்தேன். அப்போது சாலகோபுரத்தில் இருந்த மூன்று கலசத்தில் ஒரு கலசத்தை காணவில்லை. மற்றொரு கலசம் வளைந்த நிலையில் இருந்தது. இது குறித்து கிராமத்தாரிடம் தெரிவித்த பின்பு காடுபட்டி போலீசாரிடம் புகார் செய்துள்ளளேன் என்றார்..சம்பவ இடத்திற்கு எஸ்..எஸ். ஐ. குபேந்திரன் மற்றும் போலீசார் பார்வையிட்டு கலச திருடர்களை தேடிவருகின்றனர்.

சோழவந்தான் அதன் சுற்று வட்டார பகுதிகளை பழமை வாய்ந்த கோவில்களில் கோபுர கலசங்கள் திருடு போயி வரும்நிலையில் பழமை வாய்ந்த பூவலிங்க அய்யனார் உள்ளிட்ட கோயில்களை குறி வைத்து இரிடியம் கும்பல் கைவரிசை காட்டி உள்ளதா.? என ஆன்மிகவாதிகள் கேள்வி எழப்பி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *