ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்.. தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலட்சியம்.. அபாயத்தை நோக்கி பொதுமக்கள்.
திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடவாசல் பகுதியிலிருந்து மஞ்சகுடி, சிமிழி, அரசவனங்காடு, காப்பணாமங்கலம் மற்றும் மணக்கால் அய்யம்பேட்டை வரை..
கடந்த ஆறு மாத காலமாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சச குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது..
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அந்த பணியினை மேற்கொண்டது. பணி நிறைவடைந்த நிலையில் அவசரகதியில் மேலோட்டமாக மண்ணை பரப்பி நிரப்பி சென்றுள்ளனர்.
தற்பொழுது பெய்து வரும் கோடை மழையின் காரணமாக சாலை ஓரங்களில் ராட்சத குழாய்கள் மூடப்பட்ட இடத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மண் உள்வாங்கி உள்ளது மேலும் மண் உள்வாங்கி இறங்கி கொண்டிருப்பதால் மேலும் சாலையும் உள்வாங்கும் அபாயம் உள்ளது…
மேலும் இது குறித்த எந்தவித எச்சரிக்கை
அறிவிப்பும் அந்த இடத்தில் வைக்கப்படவில்லை.
இதனால் சாலை ஓரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள், மற்றும் வாகன ஓட்டிகள், கால்நடைகள் அந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் தெரு விளக்கு இல்லாத காரணத்தினால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சைக்கிள் முதற்கொண்டு எந்த வாகனமும் தார் சாலையை விட்டு சிறிது இறங்கினாலும் சிறிது ஓரமாக சென்றாலும் அவை கவிழும் அபாயத்தில் தான் இருக்கிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மழை பெய்து மண் நன்றாக இறங்கி செட் ஆன பிறகு ராட்சத குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் எந்தவித பள்ளமும் ஏற்படாதவாறு அனைவரும் பயணிக்கும் வகையில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்கள்
உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை துரித நடவடிக்கை எடுத்து
அந்த பள்ளங்களை மூடவில்லை என்றால்.. அந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள், பேரூந்துகள் மற்றும் வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.