விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியமூர்த்தி சுவாமிகளின் வள்ளலார் இல்லத்தில் வைத்து குருபூஜை சிறப்பாக நடைபெற்றது.
சத்தியமூர்த்தி சுவாமிகளுக்கும், ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காலை முதல் பக்தர்கள் அகவல் பாராயணம் பாடி பஜனை பாடல்களும் பாடினார்கள். சரவணன் சுவாமிகள் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமிகளின் நினைவாலயம் ஸ்ரீ அய்யனார் சுவாமிகளின் நினைவாலயம் போன்றவைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.