கொடைக்கானல்
ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா 5000 பயாணிகளுக்கு உணவு மற்றும் கம்பளி அன்பளிப்பு.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் கொடைக்கானல் லேக் ரோட்டில் அமைந்துள்ள சத்திய சாய் சுருதி வளாகத்தில்
காலை 8.00 மணிமுதல் அன்னதானம், மற்றும் பகவானின் திருவுருவ காலண்டர் மற்றும் கம்பளி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சுமார் 5000 பயனாளிகள் கலந்துக்கொண்டுபகவானின் அருளாசி பெற்றனர். பிறந்தநாள் விழாவின் தொடக்கமாக நேற்று கொடைக்கானல் வாழும் சுமார் 30 குதிரைகளுக்கு கொள்ளு அளிக்கப்பட்டது. மேலும் இன்று காலையும் மாலையும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இவ்விழாவின் ஏற்பாடுகளை
தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவாகத்தினர் செய்திருந்தனர்.