தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது மேலும் போதை பொருட்களும் கடத்தப்பட்டு தொடர் கதையாகவே இருந்து வருகிறது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கடத்தல் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது இந்த நிலையில் சனிக்கிழமை இரவு படகுமூலம் இலங்கைக்கு பீடிலை கடத்துவதாக க்யூ பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் விஜய அனிதா கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்க்யூ பிரிவு போலீசார் தருவகுளம் அருகே உள்ள பட்டினமருதூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பிடியிலை இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு வந்த போதுக்யூ பிரிவு போலீசார் பீடி இலையை பறிமுதல் செய்து லோடு வேன் ஒன்று ஒரு குட்டி யானை ஆகிய இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்

அப்போது அங்கு இருந்த உமைய ராஜா (31) த/பெ. கருப்பசாமி. மதுரையைச் சேர்ந்தவர் அதுபோல ஹபிபு ரஹ்மன்(38)த/பெ. சீனி நைனா முகம்மது ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆகிய இருவரையும் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர் வாகனத்தில் இருந்த 30 கிலோ எடை கொண்ட 13 மூடை பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு 15 லட்சம் ஆகும் பிடிப்பட்ட பீடி இலையை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *