மன்னார்குடி, நவ.23
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக பல்வேறு சிகிச்சை முறைகள் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டயாலிசிஸ் சிகிச்சை முறையும் இங்கு உரிய மருத்துவர்கள் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
டயாலிசிஸ் இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளதை அறிந்த மன்னார்குடி ரோட்டரி சங்கத்தினர் சுமார் 10 டையாலிசிஸ் இயந்திரங்களை இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வழங்கியது. 76 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 10 டையாலிசிஸ் இயந்திரங்கள், குளிர்சாதன இயந்திரம் கட்டில், தூய்மையான குடிநீர் வசதி என சுமார் 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ரோட்டரி சங்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் மன்னார்குடி தலைவர் சிரில் , மருத்துவமனையின் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் , முன்னாள் ஆளுநர் ரோட்டரி கிளப் M செந்தில்குமார், முன்னாள், துணை ஆளுநர் பி சூர்யா பிரகாஷ், முன்னாள் துணை ஆளுநர் எஸ். மீனாட்சி, முன்னாள் தலைவர் A. தண்டபாணி, முன்னாள் தலைவர், எஸ் கே ரத்தினசபாபதி, எஸ் ஜி கார்த்திகேயன் முன்னாள் தலைவர், ரோட்டரி கிளப் உறுப்பினர் A. சரவணன் மற்றும் மருத்தவமனை செவிலியர்கள், டயாலிசிஸ் பிரிவு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.