அரூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுக நகர கழக செயலாளர் ஏ.ஆர்.எஸ்.எஸ். பாபு, ஏற்பாட்டில் அரூர் அதிமுக எம்எல்ஏ வே.சம்பத்குமார் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர் பின்னர் புதியதாக இணைந்த அனைவருக்கு எம்எல்ஏ வே.சம்பத்குமார் சால்வை அணிவித்து விண்ணப்பம்
படிவங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி
மாவட்ட ஐடி.விங் துணை செயலாளர் ஏஆர்எஸ்எஸ்.சக்தவேல் நகராட்சி மன்ற உறுப்பினர் பூபதி முன்னாள் கூட்டுறவு சங்க இயக்குநர் செந்தில், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.