கோவையில் ஷிட்டோ-ரியூ கராத்தே தோ இந்தியா அமைப்பின் மாநில அளவிலான கராத்தே போட்டி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது..
அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் பொது செயலாளர் ஆசாத் காமில் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ஆல் இந்தியா தலைவர் சசிதரன் தலைமை வகித்தார்..
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி,மற்றும் தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..
முன்னதாக விழாவில் பேசிய தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி,மாணவர்கள் கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் ஒழுக்கம்,மன தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்..
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைகளில் தமிழக மணவர்களை தொடர்ந்து ஊக்கபடுத்தி வருவதாக தெரிவித்த அவர்,உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு தேசிய அளவில் நடைபெறும் எல்ல போட்டிகளிலும் தமிழக மாணவர்கள் ஜொலித்து வருவதாக கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர்,கராத்தே விளையாட்டை தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்..
நிகழ்ச்சியில்,போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக் குமார்,,தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், ஜீவன்ஸ் குழுமங்களின் தலைவர் அப்துல் அஜீஸ்,பல்சமய நல்லுறவு இயக்க ஒருங்கிணைப்பாளர் டிஸ்கோ காஜா,பகுதி செயலாளர் ஷேக் தாவூத்,அன்னை மெட்ரிக் பள்ளி விக்டர்,ஜீவன்ஸ் பள்ளி இயக்குனர் சிவக்குமார், பாபு ,கோவை தல்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர்..