திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காந்தி நகரை சேர்ந்த திவ்யா உட்பட அவரது குடும்பத்தினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பின்னர் அவர்களது மனுவில் கூறியதாவது. அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஹரி என்பவர் கடந்த 20 ஆம் தேதி அன்று இரவு மற்றும் 21ஆம் தேதி அன்று காலை. என்னையும் எனது அம்மா ரோஸ்மேரி உள்ளிட்ட எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஹரி என்பவர் வெளிய ஆட்கள் சேர்த்துக்கொண்டு போதைப் பொருள்கள் குறிப்பாக இரண்டு மூன்று நபர்கள் கஞ்சா அடித்துவிட்டு பெண்கள் என்று பாரம்பட்சம் பார்க்காமல் எங்களை தாக்கி உள்ளனர்.

அவர்கள் தாக்கிய நிலையில் நாங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம் பின்னர் வீடு திரும்பிய பிறகு மீண்டும் அவர்கள் ஆபாசமாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.. எனவே எங்களை தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்யக் கோரியும் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி நகர காவல் நிலையத்தில் பலமுறை மனுக்கள் அளித்து. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெண்கள் என்று பார்க்காமல் தாக்கியவர்கள் மீது உடனடியாக கைது செய்யவேண்டும் .கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் . எனக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மற்றும் ஆரணி நகர காவல் நிலைய காவலர்களை விசாரித்து எங்கள் தாக்கியவர்கள் மீது ஊரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என இவ்வாறு கூறினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *