கோவை காளப்பட்டி பகுதியில் திமுக வர்த்தகர் அணி கூட்டம் நடைபெற்றது.கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாரிச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இதில் மாநில–மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதி அமைச்சரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம்,தவெக தலைவர் விஜய் திமுக குறித்து பேசினாலும் அதிமுக, பாஜக குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டினார். “திமுக கொள்கைக்காக வாழும் கட்சி. அண்ணா, பெரியார் பற்றி எங்களுக்கு பாடம் சொல்ல தேவையில்லை” என்றார்.
எடப்பாடி பழனிசாமி பாஜக அடிமையாகிவிட்டதால் அதிமுக அழியும் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.SIR வாக்காளர் பட்டியல் முறையில் பாஜக குளறுபடிகள் செய்கிறது; திமுக தீவிரமாக கண்காணிக்கிறது என்றும் கூறினார்.
சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ஒப்புதல் வழங்காத மத்திய அரசை கண்டித்த அவர் “கோவைக்கு மெட்ரோ அவசியம்” என வலியுறுத்தினார்.வரும் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மாநிலம் முழுவதும் கொண்டாடவுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.