தாராபுரம் செய்தியாளர்
பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் இயேசுநாதர் சிலையில் பால் வடிந்த அதிசயம்!
பார்க்க மக்கள் பெரும் திரளாக வந்ததால் பரபரப்பு – அறிவியல் வட்டாரமும் ஆராய்ச்சி அவசியம் என பார்வை.
தாராபுரம்,திருப்பூர் மாவட்டம் – தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியில் நிகழ்ந்த அபூர்வ சம்பவம் அப்பகுதி முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான பொறியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் என்பவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இயேசுநாதர், மாதா, குழந்தை இயேசு உள்ளிட்ட பல்வேறு சிலைகளில் இருந்து திடீரென பால் போன்ற திரவம் வடிந்தது.
காலை பூஜை அறை சென்ற ஸ்டீபன், சிலைகளின் உடல் மேற்பரப்பில் வெள்ளை நிற திரவம் சிந்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அப்பகுதி மக்கள் பெருமளவில் வந்து சிலைகளைப் பார்வையிட்டனர்.
பால் வடிந்து தயிர் போல மாறிய திரவம்! – மக்கள் பக்தி உணர்வுடன் வணக்கம் செலுத்தினார்.
ஸ்டீபன் வைத்திருந்த சிலைகள் மீது பால் வடிந்து, பின்னர் அது தயிர் போன்று திரவமாகவும், எண்ணை போன்ற நீர்த்த தன்மையுடனும் மாறியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு மக்கள் கண்கூடாக பார்த்து வணங்கிச் சென்றனர். சிலர் இதனை அற்புத நிகழ்வு எனக் கருதி மண்டியிட்டு பிரார்த்தனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற நிகழ்வு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் சிறிய அளவில் நிகழ்ந்ததாக ஸ்டீபன் தெரிவித்துள்ளார். அப்போது அது முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் இம்முறை அனைத்து சிலைகளிலும் திரவம் வெளிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிலையிலிருந்து வெளிவரும் அந்த எண்ணையை நோயாளிகளுக்கு தடவி பார்த்தபோது, நோய் குணமடைந்ததாக நம்பிக்கை உள்ளது என ஸ்டீபன் பகிர்ந்துள்ளார். இதனால் அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து அந்த திரவத்தை வாங்கிச் செல்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
பக்தர்கள் பலர்,“இது இயேசுநாதரின் அருளாட்சி… பக்திக்கு பதிலளிக்கும் அறிகுறி,”
என நம்பிக்கை கூறி வருகின்றனர்.
சிலர் “இயேசுநாதர் சிலைகளில் பால் வடிவது, நம் வீட்டில் ஒரு ஆன்மீக மாற்றத்திற்கான சின்னமாகும்,”என்றும் தெரிவிக்கின்றனர்.
இதனால் சென்னியப்பா நகர் முழுவதும் பக்தி சூழல் நிலவுகிறது.
இந்நிகழ்வு குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது:
சிலைகள் தயாரிக்கும் போது ஏற்படும் இடைவெளி அல்லது விரிசல் காரணமாக வெளிக்காட்சி திரவம் உருவாக வாய்ப்பு உள்ளது.
சிலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள், சூடு–ஈரப்பதம் மாற்றங்கள் போன்றவை சேர்ந்து பால் போன்ற திரவம் வெளிப்பட முடியும்.ஆனால், இது உண்மையில் அதிசயமா அல்லது இயற்கை/ரசாயன விளைவா? என்பதை உறுதிப்படுத்த அரசியல்/அறிவியல் ஆய்வு செய்யவேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிகழ்வு குறித்து படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. “தாராபுரத்தில் அதிசயம்” என்ற தலைப்பில் பலர் பகிர்ந்து வருவதால் இணையத்திலும் இது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.