பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் “புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட் ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்.நவ.25. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் “புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 362 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
“ஒழிப்போம் ஒழிப்போம் குழந்தை திருமணத்தை ஒழிப்போம்”, “தடுப்போம் தடுப்போம் குடும்ப வன்முறையைத் தடுப்போம்”, “ஒழிப்போம் ஒழிப்போம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்”, ‘ஊக்குவிப்போம் ஊக்குவிப்போம் பெண் கல்வியை ஊக்குவிப்போம்”, “பாலின வன்முறைக்கு எதிராக குரலெழுப்புவோம்”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவ உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன், மகளிர் திட்ட உதவி அலுவலர் பெர்லினா , வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.