மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை நீர் தேங்கி நிற்ப்பதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்க பட்டும் மிகவும் சிரமம் பட்டு வருகின்றனர்.
மழை நீர் தேங்குவதனால் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்க படுவார்கள் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொது மக்களின் நலன் கருத்தில் கொண்டு மழை நீர் தேங்கி கிடக்கும் இடங்களில் மோட்டார் மூலம் நீரை அகற்றி இனி வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களிளும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன.
ஆகவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை தற்க்காலியமாக பழுது பார்க்காமல் தரமான புதிய தார் சாலைகளை போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் மேத்தன போக்காக இருக்கும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க கோரியும் மாபெரும் போராட்டத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.