திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கீழப்பெருமழை ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இங்கு போதிய இடவசதி இல்லாத இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் பக்கத்தில் உள்ள பழுதடைந்த நிலையிலும் பெரும் விபத்துகளை ஏற்படும் வகையிலும் மக்களை அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கிராம நிர்வாக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
விபத்துக்கள் ஏற்படும் வகையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தையும் அப்புறப்படுத்திவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்துடன் இணைத்து கிராம நிர்வாக அலுவலகத்தையும் கட்டிக் கொடுக்க வேண்டும் என கீழப்பெருமழை கிளைத்தலைவர் T.M.சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் S.P.செந்தில்நாதன், மாவட்ட அமைப்புச்சாரா அணி செயலாளர் கள்ளிக்குடி பாரதிராஜா,ஒன்றிய அமைப்புசாரா அணி தலைவர் P.முத்துக்குமரன், ஒன்றிய பட்டியல் அணி தலைவர் N.V.லெனின்,மற்றும் கட்சியினரும் நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.