தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக குண்டடம் சமுதாய நல கூட்டத்தில் விவசாய மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
குண்டடம் வட்டாரத்தின் உதவி இயக்குனர் பொ. பொம்மராஜு அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார் இதில்.துர்க்கையண்ன் வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் அவர்கள் கலந்துகொண்டு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி, உரம் மேலாண்மை பற்றியும் ஆனந்த் ராஜூ -தாவரவியல் இனப்பெருக்கவியல் வல்லுநர் அவர்கள் கலந்துகொண்டு பயிர்களில் பருவநிலை மாற்றத்தினால் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை கையாலும் நடைமுறை பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
திலகம்-வேளாண்மை விரிவாக்க வல்லுநர் அவர்கள் கலந்து கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் சந்தைப்படுத்துவதில் உள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் விவசாயிகளுடன் கலந்தரையாடல் நடைபெற்றது.
குண்டடம் தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வி. அனிதா அவர்கள் கலந்து கொண்டு தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும், செல்வி. கவிப்பிரியா வேளாண்மை அலுவலர் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும், விக்னேஷ் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும், செந்தில்குமார் துணை வேளாண்மை அலுவலர் வேளாண் துறை தொழில்நுட்பங்கள் பற்றியும் பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மக்காச்சோளம் தென்னை காய்கறி பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்து மற்றும் நோய் மேலாண்மை பற்றி விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்க உரை வழங்கினார். இதில் அட்மா திட்டத்தின் தலைவர் மற்றும் குண்டடம் வட்டார விவசாய பெருமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாட்டினை அட்மா திட்டத்தின் வட்டார தொழில் நுட்ப மேலாளர் கிரிதரன் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்.கவிதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.