உத்தமபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய கம்பம் எம் எல் ஏ தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துணை முதல்வர் மாநில திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உத்தமபாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் 100 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பண்பாளர் கம்பம் நா ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவச புத்தாடைகள் அறுசுவை அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அணைப்பட்டி வீ முருகேசன் உத்தமபாளையம் பேரூர் செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எம் எஸ் முகமது அப்துல் காசிம் தேனி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அபுதாஹிர் ஒன்றிய துணை செயலாளர் முருகேசன் மற்றும் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்