தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வாடியூரில் மத்திய அரசின் விருதினை பெற்ற அக்கினி சிறகுகள்
ஆயத்த ஆடை தயாரிப்பு பெண்கள் சுய உதவிகுழுவிற்கு பாராட்டு விழா
மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா
திட்ட இயக்குனர் குருநாதன் தலைமையில் நடைப்பெற்றது

ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா மணிகண்டன்,
மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன்,
ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிச்சாமி,நபார்டு திட்ட மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ் , விஜயகணபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

வாடியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதிவர் (எ) அந்தோணி வாழ்த்துரை வழங்கினார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர்
பழனி நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
மகளிர் சுய உதவி குழுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் சலுகையால் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க்கின்றனர். பெண்களுக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஆலங்குளம் யூனியன் தலைவராக திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலராக முத்துலட்சுமி அன்பழகன் ஆகியோர் பெண்களாக உள்ளதால் உங்கள் கஷ்டம் அறிந்து உங்கள் இடத்திற்கு வந்து உங்கள் குறையை தீர்த்து வைக்கின்றனர்.

கல்லூரி செல்லும் பெண்களுக்கு உதவி தொகை வழங்குகிறது.

குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் என பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்கு வழங்க இருக்கிறது.

கொரோனா காலத்தில் பொதுமக்களை காக்கும் வகையில் முகக் கவசம் மற்றும் மஞ்சள்பை ஆகியவற்றை தயாரித்து மத்திய அரசின் விருதைப் பெற்ற அக்னி சிறகுகள் மகளிர் சுய உதவி குழுவிற்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சித் தலைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.

நிகழ்ச்சியில் சிவக்குமார்,அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், துணை தலைவர் சுதர்சன்,காங்கிரஸ் வட்டார தலைவர் கனேசன், ஊராட்சி செயலர் சார்லஸ் மகளிர்சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *